செய்திகள் :

நெல்லை: ”விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்” – கனிமொழி MP

post image

திருநெல்வேலியில் கடந்த 27-ம் தேதி ஐ.டி ஊழியரான கவின்குமார் ஆணவக் கொலைவின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே இந்தக் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது தந்தையான காவல் அதிகாரி சரவணன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவினின் வீட்டிற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்து அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது பேசிய கவினின் தாயார், “இரண்டு சிசிடிவி கேமரா காட்சிகள் மட்டுமே எங்களிடம் போலீஸார் காட்டியுள்ளனர்.

ஆறுதல் கூறிய கனிமொழி
ஆறுதல் கூறிய கனிமொழி

மீதமுள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை எங்களிடம் காட்டவில்லை. அங்குதான் கூலிப்படை இருந்ததாகச் சந்தேகிக்கிறோம். முழுக்க முழுக்க இந்தக் கொலைக்கு குற்றவாளியின் தாய், தந்தையும் மட்டுமே காரணம் வேறு யாரும் இல்லை.  

கொலை நடந்த நாளில் காவல் நிலையத்தில் எங்களைக் கடுமையாக அலைக்கழித்தார்கள். தனியாக அறையில் எங்களை அடைத்து வைத்தார்கள். இதேபோல் அவர்களது மகனை நாங்கள் கொலை செய்திருந்தால் எங்களைச் சும்மா விடுவார்களா? இதுபோல் ஆணவக் கொலைகளுக்குச் சரியான தண்டனைகள் கிடைத்தால்தான் இனிமேல் நடக்காது” எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இப்படிப்பட்ட கொலைகள், ஆணவக் கொலைகள் நடக்கக்கூடாது என்பதுதான் இந்தச் சமூகத்தின் உணர்வாக இருக்கிறது.

இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடாத ஒரு நிகழ்வு. பெற்றோர்கள் தங்களது இளம் மகனை இழந்து தவிப்போடு இருக்கக்கூடிய சூழலில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று முதல்வர் சார்பில் அமைச்சர்கள் அவர்களின் பெற்றோரைச் சந்தித்துள்ளோம்.

நிச்சயமாக அவர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை அரசு உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையைத் தருவதற்காக இங்கு வந்தோம். விசாரணைக்குப் பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆறுதல் கூறிய கனிமொழி
ஆறுதல் கூறிய கனிமொழி

இந்த வழக்கை முதல்வர் சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் இந்த வழக்கு நடத்தப்பட்டு பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழல் நிச்சயம் உருவாக்கப்படும்.

ஆணவக் கொலைக்கு எதிராக நானும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இது நாடு தழுவிய ஒரு பிரச்னையாக உள்ளது. திருமாவளவன் இது தொடர்பாக அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம்” என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்கள்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க