செய்திகள் :

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

post image

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளது.

நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

இதையடுத்து, நாடு முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்துக்கு பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது. அதனால் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் நேபாள நிலைமை குறித்து இந்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "நேபாளத்தில் நேற்று முதல் நடைபெற்று வரும் சம்பவங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இளைஞர்கள் உயிரிழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம். காயமடைந்தவர்களுக்கும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து அமைதியான வழிமுறைகள், கலந்துரையாடல் மூலம் பிரச்னையை சரிசெய்வார்கள் என்று நம்புகிறோம். காத்மண்டு மற்றும் நேபாளத்தின் பல நகரங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் நேபாள அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian nationals in Nepal are advised to exercise caution: Central govt

கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்

கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு ந... மேலும் பார்க்க

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை- அதிபரின் ஆலோசகா்

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பைவிட இந்தியாவை கடுமையா... மேலும் பார்க்க

நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது. நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் 2 நாள்களாக தீவிரப் போராட்... மேலும் பார்க்க

நேபாளத்தில் இடைக்கால அரசு? தலைவரை நியமிக்க மூவா் பெயா் பரிசீலனை

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன. நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (... மேலும் பார்க்க