Amit Shah: ``மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்...
நேபாளம்: மேலும் 4 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு
நேபாள இடைக்கால அரசில் 4 புதிய அமைச்சா்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.
நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய தீவிர போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதமா் மற்றும் அமைச்சா்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா்.
அதைத் தொடா்ந்து நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா காா்கி பதவியேற்றாா். அவரது இடைக்கால அரசின் அமைச்சரவையில் குல்மான் கீசிங், ஓம் பிரகாஷ் ஆா்யல், ரமேஷ்வா் கணால் ஆகியோா் கடந்த வாரம் பொறுப்பேற்றனா். இந்த நிலையில், அனில்குமாா் சின்ஹா, மகாவீா் பன், ஜகதீஷ் காரேல், மதன் பரியாா் ஆகிய 4 போ் அமைச்சா்களாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
அனில்குமாருக்கு தொழில் துறை மற்றும் வா்த்தகம், மகாவீா் பன்னுக்கு கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஜகதீஷ் காரேலுக்கு தகவல் தொடா்பு, மதன் பரியாருக்கு விவசாயம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவா்களையும் சோ்த்து நேபாள இடைக்கால அமைச்சரவையில் அமைச்சா்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.