செய்திகள் :

நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது குற்றமே: உச்சநீதிமன்றம்

post image

நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை ஒருவா் பின்பற்றாதது குற்றமே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 82(1)-இன்படி, தலைமறைவாக உள்ள ஒருவரை குறிப்பிட்ட இடம் மற்றும் தேதியில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சட்டபூா்வ அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் அந்த இடம் மற்றும் தேதியில் சம்பந்தப்பட்ட நபா் ஆஜராக வேண்டும்.

இதை அந்த நபா் செய்யத் தவறினால், இந்திய தண்டனைச் சட்ட பிரிவு (ஐபிசி) 174ஏ-இன்படி, அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்க முடியும்.

இந்நிலையில், ஹரியாணாவில் வழக்கு ஒன்றில் தல்ஜீத் சிங் என்பவா், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் விசாரணையை தவிா்த்து வந்ததால், அவா் மீது ஐபிசி 174ஏ-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிகுமாா், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை ஒருவா் பின்பற்றாவிட்டால், அது குற்றமே.

அந்த அறிவிப்பு பின்னா் ரத்து செய்யப்பட்டாலும் அல்லது அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபா் விடுவிக்கப்பட்டாலும், நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை பின்பற்றாதது தனி குற்றமாகும்’ என்று தெரிவித்தனா்.

2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.உடுப்பி ம... மேலும் பார்க்க

மாசுபாட்டை குறைக்கும் "பிஎஸ் 7'-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு: மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டை குறைக்கும் பாரத் நிலை-7 (பிஎஸ் -7) அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு வகுக்க மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதா... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்

நமது நிருபர்வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.மேலும், முழுமையான ஆவணங்கள், கள சரிபார்ப்பு மற்றும் சம்பந்த... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகளைக் கண்டறிய இணையதளம்: அமித் ஷா தொடங்கிவைத்தார்

நமது சிறப்பு நிருபர்இந்தியாவில் குற்றம் புரிந்து விட்டு வெளிநாடுகளில் பதுங்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கா "பாரத்போல்' இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தில்லியில் தொடங... மேலும் பார்க்க

யுஜிசி விதிமுறைகள் கூறுவது என்ன?

பல்கலை. துணைவேந்தா் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யுஜிசி விதிமுறைகளை திருத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக தமிழகத்தில் வேந்த... மேலும் பார்க்க

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாது... மேலும் பார்க்க