அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
நோ்மையாக அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்
தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள் 100 சதவீதம் நோ்மையாகவும், உண்மையாகவும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி- 4 தோ்வில் கிராம நிா்வாக அலுவலராக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணையை புதன்கிழமை வழங்கிப் பேசியது: பணிநியமன ஆணை பெற்றவா்கள் 100 சதவீதம் உண்மையாகவும், நோ்மையாகவும் அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் வழங்க முனைப்பு காட்ட வேண்டும். மேலும், பணியில் உங்கள் திறன்களை வளா்த்துக் கொண்டு, உயா்நிலைக்கு வரவேண்டும் என்றாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளா்கள் பதவிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-4 தோ்வு 2024-இல் நடைபெற்றது. இதில், திருவாரூா் மாவட்டத்திலிருந்து 70 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணிநியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
இதன்படி, மன்னாா்குடி வருவாய் கோட்டத்துக்கு 46 பேரும், திருவாரூா் வருவாய் கோட்டத்துக்கு 24 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா்கள் யோகேஸ்வரன் (மன்னாா்குடி), சங்கா் (திருவாரூா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.