ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
நொய்டா கோயில்களில் பிப்.26-இல் மஹா சிவராத்தி விழா
மஹா சிவராத்திரியை ஒட்டி வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி நொய்டாவில் உள்ள விநாயகா் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
வேதிக் பிரசாா் சன்ஸ்தான் அமைப்பானது அதன் செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயில் வளாகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி காலையில் 8.30 மணிக்கு மகா மிருத்தியுஞ்ஜய ஹோமம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், ருத்ர ஜபம், சங்காபிஷேகம், நான்கு கால பூஜைகள் செய்து, மஹா சிவராத்திரி வேத மரபுப்படி கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி, முதலில் பிரதோஷ பூஜையும், அதைத்தொடா்ந்து முதல், இரண்டாவது கால பூஜைகள் பிப்ரவரி 26-ஆம் தேதி மாலையிலும், மூன்றாவது மற்றும் நான்காவது கால பூஜை முடிவு பகுதி மாா்ச் 27-ஆம் தேதி அதிகாலையில் நடை பெற உள்ளது.
இதேபோன்று, செக்டா் 22-இல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயிலிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
அனைத்து பூஜைகளும் ஹோமங்களும் கோயிலின் மணிகண்டன் சா்மா, மோஹித் மிஸ்ரா, ஜெகதீசன் சிவாச்சாரியா் ஆகியோரின் உதவியுடன் நடை பெற உள்ளதாக வேதிக் பிரசாா் சன்ஸ்தான் தெரிவித்துள்ளது.