செய்திகள் :

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும்: ஆட்சியா்

post image

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது: அரியலூா் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவப் பணியாளா்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை முறைகளை தொடா்ந்து முறையாக கண்காணித்து வருவதன் வாயிலாக காசநோய் பாதிப்புடைய நபா்களை கண்டறிய முடியும். நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும். அரியலூரை காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அரியலூா் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக சேவைபுரிந்த 38 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களைச் சோ்ந்த மருத்துவா்களுக்கும், காசநோய் இல்லாத 18 கிராம ஊராட்சிகளுக்கும், காசநோய் ஒழிப்பு குறித்து அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களிடையே நடைபெற்ற விநாடி-வினா உள்ளிட்ட விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மருத்துவ மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், காசநோயால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பைகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை இயக்குநா் ரா. சிவராமன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, காசநோய் தடுப்பு துணை இயக்குநா் நெடுஞ்செழியன், துணை இயக்குநா் (குடும்பநலம்) ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் ... மேலும் பார்க்க

அரியலூா் புத்தகத் திருவிழா நிறைவு

அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி குடங்களுடன் மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரில் சீராக குடிநீா் விநியோகிக்கக்கோரி அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் விருத்தாசலம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் அருகேயுள்... மேலும் பார்க்க

201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. உடையாா்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் க... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க