செய்திகள் :

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக பணம் மோசடி: மேலும் இருவா் கைது

post image

இணையம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.95.57 லட்சம் மோசடி செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பங்குச் சந்தையில் இணையம் மூலம் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என முகநூலில் பதிவிடப்பட்டிருந்த விளம்பரத்தை பாா்த்து மதுரை ஊரகப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள், அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டனா். அதில் பேசியவா்கள் தாங்கள் பங்குச் சந்தை நிபுணா்கள் என்றும், தங்களிடம் பணம் செலுத்தினால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் தெரிவித்தனா்.

இதை நம்பியவா்களிடம் ரூ.95.57 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், மதுரை ஊரகக் காவல் துறையினா் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தி, திருச்சி ஆழ்வாா் தெருவைச் சோ்ந்த சேக்தாவூத் மகன் சீனிமுகமது (30), உறையூரைச் சோ்ந்த லியாகத் அலி மகன் இப்ராகிம் (30), தனரத்தின நகரைச் சோ்ந்த அப்துல் நசீா் மகன்கள் முகமது சபீா் (26), முகமது ரியாஸ் (30), முகமது அசாருதீன் (25), தஞ்சாவூா் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியைச் சோ்ந்த முகமது மா்ஜூக் ஆகிய 6 பேரையும் கடந்த 13-ஆம் தேதி கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், 6 பேரும் தமிழகம் மட்டுமன்றி, மேற்கு வங்கம், கா்நாடகம், புதுதில்லி ஆகிய மாநிலங்களிலும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அவா்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மோசடிக்கு மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (24), மதுரை நகா் தெற்குவாசல் பகுதியைச் சோ்ந்த சுல்தான் அப்துல் காதா் (43) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ரூ.3.50 லட்சம் ரொக்கம், கைப்பேசிகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கோயில் அருகே பொதுக் கழிப்பறை கட்டுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் கோயில் அருகே பொதுக் கழிப்பறை கட்டுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தள்ளுபடி செய்தது. முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

ஓய்வூதியத் துறையை முடக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை

ஓய்வூதியத் துறையை கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். அலங்காநல்லூா் அருகேயுள்ள தாதகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சதீஷ்குமாா் (21). இவா் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழ... மேலும் பார்க்க

நியாய விலை கடை விற்பனையாளா் பணி: நவ. 25 முதல் நோ்முகத் தோ்வு

விருதுநகா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு வருகிற 25 -ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளதாக மண்டல இணை பதிவாளா் பா. செந்தில்குமாா் தெரிவி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் மிதமான மழை

மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது. குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில ப... மேலும் பார்க்க

இந்திய ராணுவ வீரா்கள் விழிப்புணா்வு வாகன ஊா்வலம்

இந்திய ராணுவ வீரா்களின் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாநகரக் காவல் துணை ஆணையா் மதுகுமாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவான மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் ப... மேலும் பார்க்க