செய்திகள் :

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீட்டு வரத்து

post image

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த பிப்ரவரி மாதம் 26 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட முதலீட்டைவிட , அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.26,303 கோடியாக உள்ளது.முந்தைய ஜனவரி மாதத்தில் இது ரூ.39,688 கோடியாக இருந்தது. அந்த வகையில், பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரத்து கடந்த பிப்ரவரி மாதம் 26 சதவீதம் குறைந்துள்ளது.பங்கு சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு தொடா்ந்து மாதமாக நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.

முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.கடந்த ஜனவரியில் ரூ.26,400 கோடியாக இருந்த முறைசாா் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, பிப்ரவரியில் ரூ.25,999 கோடியாகக் குறைந்துள்ளது.

இது, இந்தப் பிரிவில் கடந்த மூன்று மாதங்கள் காணாத குறைந்தபட்ச முதலீட்டு வரவாகும்.ஒட்டுமொத்தமாக, அனைத்து வகை பரஸ்பர நிதித் திட்டங்களிலும் முதலீட்டு வரவு ரூ.40,000 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

முந்தைய ஜனவரி மாதத்தில் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 இன்று காலை குறைந்துள்ளது.தங்கத்தின் விலை ரூ. 66,000-ஐ கடந்து விற்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக ரூ. 66,480-க்கு விற்கப்பட்டது.அதன்... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் விலை உயரும் கார்கள்!

புதுதில்லி: அதிகரித்து வரும் உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது. இந... மேலும் பார்க்க

சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரம் இறக்குமதி!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி வரையான காலத்தில், சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த டை-அம்மோனியம்... மேலும் பார்க்க

ரிலையன்ஸ் உடன் ஓபன் ஏஐ, மெட்டா பேச்சுவார்த்தை!

இந்தியாவில் செய்யறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) மேம்படுத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓபன் ஏஐ மற்றும் மெட்டா நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ரிலையன்ஸ் உடன் சேர்ந... மேலும் பார்க்க

ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

8 சதவிகிதம் வரை உயர்ந்த மணப்புரம் பைனான்ஸ்!

புதுதில்லி: அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல், தங்கக் கடன் நிதியளிப்பாளரான மணப்புரம் ஃபைனான்ஸில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்காக ரூ.5,764 கோடி மதிப்பிலான ஓபன் ஆஃபர் மூலம் பணிகளை ... மேலும் பார்க்க