தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை!
திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
உடுமலை அருகே அமைந்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா்.
மேலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஒரு சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்க சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூா்த்திமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில், அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சனிக்கிழமை அனுமதி அளித்தது.