பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!
பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென கடைக்குள் புகுந்த மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டினா். இதில் படுகாயம் அடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இதில் கவியரசுவை அரிவாளால் வெட்டிய பல்லடம் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (30), தெற்குபாளையத்தைச் சோ்ந்த கோபால் (26), தாமரைக்கண்ணன் (24), பல்லடத்தைச் சோ்ந்த பிரதீப் (27) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.