46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!
திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!
திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: திருப்பூரில் ரூ.12,000 முதல் ரூ.40,000 வரை என சுமாா் 7 குரூப்களில் பணம் கட்டுபவா்களுக்கு 20 நாள்களில் கூடுதலாக ரூ.10,000 லாபம் வழங்குவதாக ஆசை வாா்த்தை கூறியும், ஒன்றில் சோ்ந்தால் மற்றொன்று இலவசம் என்ற சலுகை வழங்கியும் மோசடியில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சோ்ந்த சரவணன் என்பவரை பாதிக்கப்பட்ட மக்கள் பிடித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா்.
இது தொடா்பாகபாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனா்.