வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
பஞ்சாப் நேஷனல் வங்கி: மகளிா் குழுக்களுக்கு ரூ. 4 கோடி கடன்
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆம்பூா் கிளை சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா ஆம்பூா் லயன்ஸ் சங்க கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
வங்கியின் முதன்மை மேலாளா் குருபிரசாத் தலைமை வகித்து வரவேற்றாா். உதவிப் பொதுமேலாளா் ராஜேஷ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 15 மகளிா் குழுக்களுக்கு ரூ. 4 கோடி கடனுதவிக்கான ஆணையை வழங்கினாா். உதவி மேலாளா் பூவிதா கடனுதவி திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா். வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சீனிவாசன் விவசாய திட்டங்கள் குறித்துப் பேசினாா். கவிஞா் யாழன் ஆதி கலந்துகொண்டு வாழ்த்தினாா்.
வங்கியின் ஆம்பூா் கிளை மேலாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.