செய்திகள் :

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் பதற்றம்: விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தம்!

post image

தில்லிக்கு பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, 17 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது.

பஞ்சாப்-ஹரியாணா எல்லையான ஷம்புவிலிருந்து இன்று(டிச. 14) சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லி நோக்கி நடைபயணத்தை மீண்டும் தொடங்கினர். அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய ஹரியாணா காவல்துறை, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை தொடர்ந்து முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறை விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அதில் காயமடைந்த விவசாயிகள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் தில்லிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட தில்லி நிர்வாகம் அனுமதி வழங்காததைத் தொடர்ந்து விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனம்: மாணவா்களுக்கு ஜகதீப் தன்கா் அறிவுரை

‘தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும்’ என தேசிய மாணவா் படையைச் (என்சிசி) சோ்ந்த இளைஞா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா். தில்லியில் கடந்த ... மேலும் பார்க்க

தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமா் மோடி வாக்குறுதி

‘தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முந்தைய மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது; அதேநேரம், திட்டங்களின் அமலாக்கத்தில் நிலவும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்கு... மேலும் பார்க்க

லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிராகரித்துள்ளாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சுட்டுக்கொலை: மோதலில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். காவல் துறை தலைமைக் காவலா் ஒருவா் உயிரிழந்தாா். சத்தீஸ்கரின் நக்ஸல் ஆதி... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா: ஐந்தில் ஒரு பங்கை பெற்ற இந்திய நிறுவனங்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில், அமெரிக்காவில் வழங்கப்பட்ட மொத்த ஹெச்-1பி விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன. அமெரிக்க நிறுவனங்களில் இந்தியா்கள், சீனா்க... மேலும் பார்க்க

ஒடிஸா: முதல்வா் அருகே ‘ட்ரோன்’ விழுந்ததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜியை புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறியரக விமானம்) எதிா்பாராதவிதமாக அவா் அருகே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாா்தகுடாவின் புருனபஸ்தி ப... மேலும் பார்க்க