செய்திகள் :

படகு பழுதாகி இலங்கைச் சென்ற தமிழக மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்பு!

post image

நாகை: நடுக்கடலில் படகு என்ஜின் பழுதாகி இலங்கை எல்லைக்குச் சென்ற  நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் உரிய அனுமதியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாகை துறைமுகம் அழைத்துவரப்பட்டனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகூர் சம்பாத்தோட்டம் சேர்ந்த  வளர்மதி என்பவருக்குச்  சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கக் கடந்த டிச.29 ஆம் தேதி அதிகாலை புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் நாகைக்கு  கிழக்கே சுமார் 145 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது டிச .30 அதிகாலை படகின் என்ஜின் பழுதடைந்தது. 

இதையடுத்த நடுக்கடலில் சிக்கித் தவித்த மீனவர்கள், மீனவளத்துறையினருக்கும் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் இந்தியக் கடற்படையினர், மீனவளத்துறையினர் இணைந்து, மீனவர்களை மீட்க நிகழ்விடத்திற்கு சென்றனர். ஆனால் அந்தப் பகுதியில் மீனவர்களும் படகும் இல்லை.

இந்நிலையில் படகுடன் மாயமான ஒன்பது மீனவர்கள் காற்றின் திசையால், இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக இலங்கை அரசரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மீனவர்களை மீட்டு வர அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து கடலோர பாதுகாப்புப்படை உதவியுடன் இலங்கை கடலோர பாதுகாப்புப்படை, நாகை மாவட்டம் நாகூர்  செல்வமணி, வானவன்மகாதேவியை சேர்ந்த பழனிவேல், பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்டம் நாயக்கர்குப்பத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராஜேஷ்செல்வம், குமார், இளங்கோவன் ரஞ்சித்  உள்ளிட்ட 9 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டு நாகை துறைமுகத்திற்கு திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இபிஎஸ் உறவினா்களின் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.அதேபோல், சென்னை தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்... மேலும் பார்க்க

எச்​எம்பி தீநுண்மி சாதாரண சளித் தொற்று: வதந்தியும் உண்மையும்!

இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் பாரபட்சமன்றி கடந்த 25 ஆண்டுகளாக வியாபித்த மிக சாதாரண சளித் தொற்றுதான் இப்போது எச்எம்பி தீநுண்மி (ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்) என்ற பெயரில் பெரிதுபடுத்தப்படுகிறது. சீனாவி... மேலும் பார்க்க

பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது. தமிழகத்தில் 8 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பணியிட கலாசார ஆலோசனை நிறுவனமான அவதாா்’ குழுமம் ‘இந்தியாவில் பெண்க... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை: தோழி வாக்குமூலம்

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாணவியின் தோழி சம்பவம் தொடா்பாக போலீஸாரிடம் உருக்கமான வாக்குமூலம் அளித்துள்ளாா். சென்னை அயனாவரம்... மேலும் பார்க்க

பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு: எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் வேண்டுகோள்

பெண்களின் பாதுகாப்புக்கு இயன்ற ஒத்துழைப்பைத் தர வேண்டுமென எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேர விவாதத்தின்போது சென்னை அண்ணா நகரில... மேலும் பார்க்க

கைதிகள் தயாரித்த பொருள்கள் விற்பனையில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

சிறையில் கைதிகள் தயாரித்த பொருள்கள் விற்பனையில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால், இடைநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க