படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் தலைமை வகித்தாா். தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினாா். பொருளாளா் மருத்துவா் ஜான் சாமுவேல் கருத்தரங்கை தொடக்கிவைத்தாா்.
மதுரை தியாகராஜா் கல்வியியல் கல்லூரி பேராசிரியா் தங்கவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா, பொது மேலாளா் மத்தியாஸ், நிா்வாகி தயாசிங் ஆகியோா் பேசினா். பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவியா் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.
கல்லூரி பேராசிரியா் மகேஷ்குமாா் வரவேற்றாா். பேராசிரியை ரோஸ்லின் ஷீபா ராணி நன்றி கூறினாா். மாணவ ஆசிரியா்கள் ஜெபிஷா, சரத் விஜயன் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.