படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!
ஹிட் 3 படப்பிடிப்பில் நானிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது இருப்பினும் உடனடியாக அடுத்த காட்சிக்கு தயாரானது குறித்து இயக்குநர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி நடிப்பில் மே.1ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிட் 3 திரைப்படம் வெளியானது.
இந்தப் படத்தினை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை ரூ.101 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக இயக்குநர் சைலேஷ் கொலனு தனது எக்ஸ் பதிவில் கூறியது வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில் நானியின் சண்டைக் காட்சி விடியோக்களையும் அதில் அவருக்கு நெற்றியில் ஏற்பட்ட காயம், தையல் போடப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு அவர் கூறியதாவது:
நான் இதைத்தான் சொல்கிறேன். உடனடியாக அடுத்த காட்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே வந்துவிட்டார். இந்த உலகத்தில் நானிக்கு அனைத்து மரியாதைகளும் கிடைக்க வேண்டும்.
சினிமா மீதான நானியின் மரியாதை மிகவும் தொற்றக்கூடியது. உங்களுடன் பயணிக்க வாய்ப்பளித்ததுக்கு மிக்க நன்றி. ஹிட் 3 படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் மகிழக்கூடிய பயணம். உங்களை நேசிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
This is what I was talking about. And he came back to my set in time for the next shot. This man deserves all the respect in this world. @NameisNani your love for cinema is so contagious, thanks for letting me have this ride with you. #HIT3 will be my most cherished journey for… pic.twitter.com/DJFJl9Aesr
— Sailesh Kolanu (@KolanuSailesh) May 4, 2025