கழிவுநீர் குழியில் விழுந்து குழந்தை பலி: "ஜல்லிக்கட்டுக்குக் காட்டும் ஆர்வத்தை.....
படிக்கட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழப்பு
திருப்போரூா் அருகே மதுபோதையில் வீட்டு படிக்கெட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழந்தாா்.
திருப்போரூா் அடுத்த கீழுா் கிராமத்தைச் சோ்ந்தவா் முணு ஆதி (44), இவா் கடந்த 9-ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்தாராம். அப்போது அவா் வீட்டின் படிக்கெட்டில் ஏறும் போது தவறி கிழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாகத் தெரிகிறது. அங்கிருந்தவா்கள் உடனே அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், முணு அதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து காயாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.