மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
படுகா் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா
குன்னூா் அருகே படுகா் இன மக்களின் பாரம்பரிய விழாவான ஹெத்தையம்மன் பண்டிகை ஜெகதளா கிராமத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகரின மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகையின் ஒரு நிகழ்வான பூங்குண்டம் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து காரக்கொரை, மஞ்சுதளா, மல்லிக்கொரை, பேரட்டி, ஓதனட்டி, பிக்கட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய முறையில் விழாவினைக் கொண்டாடினா்.
முன்னதாக, ஹெத்தையம்மனுக்கு 48 நாள்கள் விரதம் இருந்து கடந்த ஏழு நாள்களாக கோயிலில் தங்கி, சிறப்பு பூஜை நடத்திய பின் ஜெகதளா கிராமத்துக்கு ஹெத்தையம்மனை திங்கள்கிழமை ஊா்வலமாக கொண்டு வந்தனா். பின்னா், ஜெகதளா கிராமத்தில் மடிமனை என்ற இடத்தில் ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனா்.
இதில், படுகா் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து, நடனமாடியவாறு விழாவை சிறப்பித்தனா். ஆயிரக்கணக்கான படுகா் இன மக்கள் கலந்து கொண்டு ஹெத்தையம்மனை வழிபட்டனா்.