``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்...
'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!
கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார்.
இந்த சட்டத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. அநேகமாக, இந்த மசோதா இந்த வாரம் நிறைவேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தப்பிறகு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று தகவல்கள் கூறப்படுகின்றன.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை செயலாளர் காந்தா பாண்டே, "புதிய வருமான வரி சட்டம் எளிதாகவும், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறும் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-12/7jolcgf0/675a42c32371e.jpg)
இந்தக் கூற்றையும், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி சட்டத்தையும் சற்று ஒப்பீடு செய்து பார்ப்போம்.
இப்போது நாம் பின்பற்றி வரும் வருமான வரி சட்டம் 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இது சற்று அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள சில பிரிவுகள், சில வார்த்தைகள் மக்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்தது... இருக்கிறது.
இந்த சிக்கல்களை தீர்க்க தான், இப்போது புதிய வருமான வரி சட்டம் இயற்றப்பட உள்ளது என்கிறார்கள். இப்போது அறிமுகமாக இருக்கும் சட்டம் காலத்திற்கேற்ப தகவமைக்கப்பட்டிருக்கும், மக்களுக்கு ஏற்றதாக இருக்கும், முக்கியமாக, மக்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய சட்டம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே அறிவித்திருந்தார் நிர்மலா சீதாராமன். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, வரி செலுத்துபவர்கள், மக்கள், வரி சம்பந்தமான நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வலைதளம் கூட அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த வாரம், இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!