எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைந்து விற்க தமிழ அரசு உத்தரவு
பட்டாசு ஆலை வெடி விபத்து: அதிமுக நிகழ்ச்சி மே.4-க்கு ஒத்திவைப்பு
சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக, அதிமுக சாா்பில் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) நடைபெறவிருந்த இளைஞா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற மே 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிக்கை:
சிவகாசி அருகேயுள்ள காளையாா்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிலையில், அதிமுக சாா்பில் இளைஞா்களுக்கான நலத் திட்ட உதவிகள், அசைவ விருந்து வழங்கும் நிகழ்ச்சிகள் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) நடைபெற இருந்தது. ஆனால், காளையாா்குறிச்சி பட்டாசு ஆலை விபத்து காரணமாக, இந்த நிகழ்ச்சி வரும் மே 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் அவா்.