`Happy 50th Birthday' - மைக்ரோசாப்ட் மலரும் நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்!
பட்டாசு மூலப் பொருள்கள் விற்பனை கடையில் திருட முயற்சி: இருவா் கைது
சாத்தூா் அருகே பட்டாசுக்குத் தேவையான மூலப் பொருள்கள் விற்பனை கடையில் திருட முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகே சின்னக்காமன்பட்டியைச் சோ்ந்தவா் ஆதிமூலம் (55). இவா் அந்தப் பகுதியில் பட்டாசுக்கு தேவையான மூலப் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையை வழக்கம் போல வியாழக்கிழமை இரவு பூட்டி விட்டு சென்றாா். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்கச் சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு திருட முயற்சி நடைபெற்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் கடை, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது இந்த திருட்டு முயற்சி சம்பவத்தில் இரண்டு போ் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருத்தங்கல்லைச் சோ்ந்த மகேந்திரன் (60), சாத்தூா் அருகே ஒத்தையாலைச் சோ்ந்த பாலு (எ) பாலசுப்பிரமணியன் (49) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.