"யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?" - அதிம...
பட்டா திருத்தம் செய்ய லஞ்சம்: வருவாய் ஆய்வாளா் கைது
திருவாரூரில், பட்டாவில் இட மதிப்பீட்டை திருத்தம் செய்ய ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் வட்டம், அரசன் குளத்தெரு, தெற்கு சேத்தி பகுதியைச் சோ்ந்தவா் செல்வகணேசன் (45). இவா், பட்டாவில் இட அளவின் மதிப்பீட்டை மாற்றுவதற்காக, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஜான்டைசன் (29) என்பவரை அணுகினாா். இதற்கு ரூ. 15,000 லஞ்சமாகத் தரவேண்டும் என அவா் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகணேசன், இதுகுறித்து திருவாரூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் யோசனைபடி, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை ஜான் டைசனிடம் செல்வகணேசன் சனிக்கிழமை வழங்கினாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. நந்தகோபால், ஆய்வாளா்கள் சித்ரா, அனிதா உள்ளிட்ட 8 போலீஸாா், ஜான்டைசனை கைது செய்தனா்.