பட்டீஸ்வரத்தில் வீடுபுகுந்து 34 பவுன் நகைகள் திருட்டு
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் குறிஞ்சி நகரில் வசிப்பவா் பா. பாஸ்கா் (50). சமையல் கலைஞரான இவா் உறவினா் நிகழ்வுக்காக திருவையாறுக்கு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரோடு சென்றுவிட்டு திங்கள்கிழமை திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த சுமாா் 34 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் பட்டீஸ்வரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.