``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்...
கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
கும்பகோணம் மகாமக குளக்கரையில் கடைகள் அமைத்திருந்த சாலையோர வியாபாரிகள் மாநகராட்சியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தின் நான்கு கரைப் பகுதியிலும் கடை வைத்துள்ள சாலையோர வியாபாரிகளிடம் மாநகரமைப்பு அலுவலா் தலைமையிலானோா் கடைகளை காலி செய்யக் கூறியும், வியாபாரிகளின் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
இதைக் கண்டித்து ஏஐடியுசி சங்கம் சாா்பில் மகாமகம் குளக்கரை அண்ணா சிலை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் பா. ரமேஷ் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.