மகரம்: `கவனம்; உடல்நல அக்கறை நிச்சயம் தேவை' - ராகு கேது தரும் பலன்கள்
பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!
உண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கும் என்பது குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
இதில், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி, பயணம் செய்யும்போது கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் மீனா என்ற பாத்திரத்தில் கோமதி பிரியா நடித்து வருகிறார். நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக இதில் கோமதி பிரியாவின் நடிப்பு பலரிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்தத் தொடரில் வெற்றி வசந்த் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கோவில் தெருவில் பூ விற்கும் இளம் பெண், வாடகைக் கார் ஓட்டுநரைத் திருமணம் செய்துகொண்டு, புகுந்த வீட்டில் சந்திக்கும் சவால்களே சிறகடிக்க ஆசை தொடரின் கதைக்களம்.
நிஜ வாழ்க்கையில் உள்ள நடுத்தரக் குடும்பத்தை பிரதிபலிக்கும் கதைக்களத்துக்கு தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் வலுசேர்த்து வருகிறார் கோமதி பிரியா.

தமிழில் மட்டுமின்றி மலையாளத் தொடரிலும் கோமதி நடித்து வருகிறார். மலையாளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அடிக்கடி தமிழ்நாட்டிற்கும் கேரளத்துக்கும் பயணித்து வருகிறார்.

இதனிடையே கர்நாடக மலைப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கோமதி பிரியா, கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி, பயணம் செய்யும்போது கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு மலைகளில் சென்றுக்கொண்டிருக்கும் ஜீப் மீது அமர்ந்தவாறு விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
பயணத்தின் மீது பிரியம் கொண்ட கோமதியின் இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | குக் வித் கோமாளி - 6 ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!