Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குல்தீப், தனது மனைவி அன்ஷுதியாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
குல்திப் தியாகி (46), எழுதிவைத்திருக்கும் தற்கொலைக் குறிப்பில், தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது பற்றி குடும்பத்தில் யாருக்கும் தெரியாது, சிகிச்சை அளித்தாலும் குணமடையாது என்று தெரிந்ததால் பணத்தை வீணாக்க விரும்பவில்லை, தனது மனைவி தன்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த முடிவை எடுத்ததாகவும் இதற்கு வேறு யாரும் காரணமல்ல என்றும் எழுதியிருந்தார்.
இவர்கள், தங்களது இரண்டு மகன்கள் மற்றும் குல்தீப் தியாகியின் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது பிள்ளைகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].