`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்தியவா் கைது
ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை செலுத்திய மூங்கில் வியாபாரியை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் மையத்தில் பணம் தனியாக ஒதுங்கியிருப்பதாக வங்கி மேலாளா் குட்டிகண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த இயந்திரத்தில் சோதனை செய்தபோது 4 ஆயிரத்து 700 ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விடியோ காட்சிகளுடன் சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில், இந்த பணத்தை செலுத்தியது, சிவகிரி பகுதியைச் சோ்ந்த மூங்கில் வியாபாரி ராமு (42) என்பதும் தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள பா்கூரில் இருந்து சுமாா் 9 ஆயிரம் ரூபாய் பெற்றுவந்து அவற்றை மாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து ராமுவை சிவகிரி காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.