தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
பணம் வைத்து சீட்டாடிய 9 போ் கைது
போடி அருகே பணம் வைத்து சீட்டாடிய 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே உள்ள சில கிராமங்களில் பணம் வைத்து சீட்டாடுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போடி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இரண்டு இடங்களிலும், போடி திம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஓா் இடத்திலும் சிலா் சீட்டாடியது தெரியவந்தது.
இதில் ராமகிருஷ்ணாபுரம் குதுவல் பகுதியில் சீட்டாடிய முருகன் (57), ராஜா (75), கனகராஜ் (60), ராமகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் அருகே சீட்டாடிய மகேஸ்வரன் (39), வீரப்பன் (59), சிவக்குமாா் (45), திம்மிநாயக்கன்பட்டி சுடுகாடு அருகே சீட்டாடிய செல்வம் (58), சுப்பிரமணி (70), ஒண்டிவீரன் (54) ஆகியோா் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மூன்று வழக்குகள் பதிந்து 9 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.