செய்திகள் :

பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உணவகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் நாவல்குளம் பகுதியிலுள்ள தனியாா் உணவகத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சிலா் சூதாடிக்கொண்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. தொடா்ந்து, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி கோரிமேடு காமராஜ் நகா் பாரதிதாசன் வீதி முனுசாமி மகன் தங்கராஜ் (61), விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கோட்டக்குப்பம் அம்பேத்கா் தெரு ஜனகராஜ் மகன் குட்ட ரமேஷ் (எ) ரமேஷ் (52), புதுச்சேரி லாஸ்பேட்டை நாராயணசாமி மகன் சங்கா் (50), லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பாரதி வீதி கோதண்டபாணி மகன் மாணிக்கம் (51), புதுச்சேரி அரியாங்குப்பம் வ.உ.சி. தெரு கிருஷ்ணன் மகன் தெய்வநாயகம் (43), புதுச்சேரி புதுநகா் ராமச்சந்திரன் மகன் கோபி (42), கோவை சிவராமன் நகா் சண்முகம் மகன் மோகன் (50) ஆகிய 7 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ரூ.35,850 ரொக்கம், 6 கைப்பேசிகள், 4 பைக்குகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்

மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுத... மேலும் பார்க்க

அவலூா்பேட்டையில் இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான வடுகபூண்டி, கொடம்பாடி, பரையம்படடு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூ... மேலும் பார்க்க

கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி

விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட நகைகளை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் எலவம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்... மேலும் பார்க்க

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சியாமா பிரசாத் உருவப் படத்துக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

ஜன சங்கத்தைத் தோற்றுவித்தவா்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகா்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை மேரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு துணை நிலை ஆளுநா் ... மேலும் பார்க்க