செய்திகள் :

பணவீக்கம் தளர்வு, வங்கி, எரிசக்தி பங்குகள் கொள்முதல் ஆகியவற்றால் மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!

post image

மும்பை: சில்லறை பணவீக்கம் குறைந்து வருவதாலும், உலகளாவிய சந்தைகள் மீண்டு வருவதால் கடந்த 4 நாட்களாக சரிந்த இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று மீண்டெழுந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 505.6 புள்ளிகள் உயர்ந்து 76,835.61 புள்ளிகளாகவும், வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 169.62 புள்ளிகள் உயர்ந்து 76,499.63 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 90.10 புள்ளிகள் உயர்ந்து 23,176.05 புள்ளிகளாக நிலைபெற்றது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை தொடர்ந்து விற்பனை செய்வதும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் சென்செக்ஸ் அழுத்தத்தில் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளில் மும்பை பங்குச் சந்தை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 2.39 சதவிகிதம் சரிந்துள்ளது.

இதையும் படிக்க: எம் & எம் விற்பனை 16% அதிகரிப்பு

30 பங்குகள் கொண்ட ப்ளூ-சிப் பங்குகளில் இன்று அதானி போர்ட்ஸ் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், சோமேட்டோ, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இண்டஸ் இண்ட் வங்கி, மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

டிசம்பர் வரையான காலாண்டில், எச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.54 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,591 கோடியாக உள்ளது என்ற தகவலையடுத்து, நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதாக முதலீட்டாளர்கள் கருதியதால் இது 8 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.

வரவிருக்கும் நாணய கொள்கை மதிப்பாய்வுகளில் வட்டி விகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கிக்கு முக்கிய இடமளிக்கும் விதமாக உணவு மற்றும் காய்கறிகள் விலைகள் சரிந்து வருவதன் காரணமாக, சில்லறை பணவீக்கம் டிசம்பரில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.22 சதவிகிதமாக சரிந்துள்ளது.

இதையும் படிக்க: ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் ரூ.4,591 கோடியாக உயா்வு!

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில், ஆசிய சந்தையான சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்தும், டோக்கியோ சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) அன்று கலவையான குறிப்பில் முடிவடைந்தது.

முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளுக்கும் அதிகமாக வாங்கியதால், அதானி பவர் பங்குகள் 20 சதவிகிதம் வரை உயர்ந்தது முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.4,892.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.12 சதவிகிதம் வரை உயர்ந்து பீப்பாய்க்கு 81.11 டாலராக உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிந்தது.தரவுகளின் அடிப்படையில் மேக்ரோ பொருளாதார எண்கள் வெளியிடப்பட்ட பிறகு உள்நாட்டு பங... மேலும் பார்க்க

சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு!

புதுதில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை ஜனவரி 31 வரையும், ராஜஸ்தானில் பிப்ரவரி 4 வரையும் மத்திய அரசு நீட்டித்துள்ளதாக வேளாண் அமைச்சர் சிவராஜ் ச... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸுடன் சரஸ்வத் வங்கி ஒப்பந்தம்!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை சரஸ்வத் வங்கியுடன் வாகன கடனுக்காக கைகோர்த்துள்ளன.ஒப்பந்தத்தின்படி, உள் எர... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

மும்பை: வலுவான டாலர் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக வரலாற்று காணாத வகையில் 58 காசுகள் சரிந்து ரூ.86.62 ஆக முடிந்தது.மே... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 1,049 புள்ளிகளும், நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிவு!

மும்பை : பலவீனமான உலகளாவிய போக்குகள், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ஒன்றுக்கு $81 உயர்வு, அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட வலுவான மாற்றங்கள் மற்றும் வட்டி விகிதக் ... மேலும் பார்க்க

கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு! ரூ. 86.31

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 27 காசுகள் சரிந்து ரூ. 86. 31 காசுகளாக வணிகமாகிறது. மேலும் பார்க்க