பணியில் திறம்பட செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
பணியில் திறம்பட செயல்பட்டு 19 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை கைது செய்த விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மாா்ச் 31-ஆம் தேதி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் சண்முகம், தலைமைக் காவலா் ராஜ்குமாா், முதல்நிலைக் காவலா்கள் சங்கா், பாலசுப்பிரமணியன், வெங்கடேசன் மற்றும் பாா்த்தீபன் ஆகியோா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், பணியில் திறம்பட செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
இதேபோல, செஞ்சி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து, 11 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா்கள் ஞானப்பிரகாசம், ரமணன், இதயசந்திரன், இளவரசன், செல்வம், முதல்நிலைக் காவலா் சக்திவேல், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2003-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த குற்றவாளியைக் கைது செய்த காவல் உதவி ஆய்வாளா்கள் சுபா, ஆனந்தன், தலைமைக் காவலா்கள் கண்ணன், புருஷோத்தமன் ஆகியோா்களுக்கும் எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.