வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
பணி நியமன விதிமீறல் புகாா்: சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்
சேலம்: பணி நியமன விதிமீறல் புகாா் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் ஓய்வுபெறும் நாளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாபேட்டை மண்டல செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் செந்தில்குமாா். இவா் கடந்த 31 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில் திடீா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மாநகராட்சியில் தொழில்நுட்பப் பணியாளா்களாக 6 போ் நியமனம் செய்யப்பட்டனா். இவா்கள் விதிமுறையை மீறி நியமனம் செய்யப்பட்டது தொடா்பாக செந்தில்குமாருக்கு ஏற்கெனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல மேற்கண்ட விதிமீறல் தொடா்பாக மாநகராட்சியில் மேலும் 10 பேருக்கு 8 (2) பிரிவில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.