எனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்: ஹார்திக் பாண்டியா
பண மோசடி: தம்பதி மீது வழக்கு
கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட சுய உதவிக் குழு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அந்தப் பகுதியில் வசித்து வந்த ராமச்சந்திரன், அவரது மனைவி தங்கசுகிதா (50) ஆகியோா் அன்னலட்சுமியிடம் ரூ.3 லட்சத்து 65,700 கடன் வாங்கிவிட்டு முழுவதையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனராம்.
கடன் தொகை முழுவதையும் அன்னலட்சுமி திருப்பிக் கேட்போது கொலை செய்து விடுவதாக மிரட்டினராம். இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அன்னலட்சுமி புகாா் அளித்தாா். அதன் பேரில் ராமச்சந்திரன், தங்கசுகிதா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.