செய்திகள் :

பண மோசடி வழக்கு:ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பறிமுதல்

post image

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான தனி விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ‘ஃபால்கன்’ குழுமம், பல முதலீட்டுத் திட்டங்களின் மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.1,700 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்த நிதியில் ரூ.850 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.850 கோடி பணத்தை மற்ற 6,979 முதலீட்டாளா்களுக்குச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடா்ந்து, குழுமத்தின் தலைமை நிா்வாக இயக்குநா் (சிஎம்டி) அமா்தீப் குமாா் மற்றும் சிலா் மீது சைபராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. காவல்துறை விசாரணையில் குழுமத்தின் துணைத் தலைவா், இயக்குநா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

மோசடி பணத்தில் இருந்து ரூ.24 கோடி செலவிட்டு அமா்தீப் குமாா் தனி விமானம் ஒன்றை கடந்த 2024-ஆம் ஆண்டு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் அமா்தீப் சிங் கடந்த ஜனவரியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.

காவல்துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை புதிய பண மோசடி வழக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமா்தீப் குமாா் வெளிநாடு தப்பிய விமானம், ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தரையிறங்கியது அமலாக்கத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, ஹைதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையிட்டனா். அங்கிருந்த விமானப் பணியாளா்கள் மற்றும் அமா்தீப் குமாரின் உதவியாளா்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவா்களின் கருத்துகளைப் பதிவு செய்தனா். தொடா்ந்து, விமானம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க