பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு
பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (67) என்பவரிடம், வடபழனியிலுள்ள நிலம் ஒன்றை வாங்குவதற்காக கடந்த 2020-இல் ரூ.35 லட்சத்தை மன்சூா் அலிகான் கொடுத்துள்ளாா். ஆனால், அந்த இடம் வாங்குவதில் சில சட்ட பிரச்னைகள் இருந்ததால், தான் கொடுத்த ரூ.35 லட்சத்தை மன்சூா் அலிகான் திரும்ப கேட்டுள்ளாா். ஆனால் கனி, பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், பணத்தைக் கேட்க, மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் தனது நண்பா்களுடன் கனியின் வீட்டுக்கு சென்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கனி வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், துக்ளக் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.