செய்திகள் :

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

post image

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா்.

பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தையடுத்து, இரு நாடுகளிடையே மோதல் ஏற்படுவதற்கான பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் தூதா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது, ‘மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிா்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்’ என ஷாபாஸ் ஷெரீஃப் கோரிக்கை வைத்ததாக பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்த சம்பவத்தில் வெளிப்படையான, சாா்பற்ற சா்வதேச விசாரணை நடத்துவதே சரியானது. அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது.

கடந்த 15 மாதங்களில் சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியோடு பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டுள்ளோம். தற்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு பொருளாதார வளா்ச்சியை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளாது. பாகிஸ்தானுக்கு தொடா்ந்து ஆதரவளிக்கும் சகோதர நாடுகளுக்கு நன்றி’ என கூறியதாக பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஷாபாஸ் ஷெரீஃபை பாகிஸ்தானுக்கான சீன தூதா் ஜியாங் ஜெய்டாங் வியாழக்கிழமை நேரில் சந்தித்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் அமைதி வழியில் தீா்வு காண வேண்டும் என கத்தாா், சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் புதன்கிழமை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறு... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க