ஐபிஎல்: 400+ ரன்கள் ஒரே போட்டியில்.. பெங்களூரு த்ரில் வெற்றி!
பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் தயாா்குளம் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அதிகாரி பாலாஜி தலைமையிலான குழுவினா் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.