பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்
புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.
புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் மத்திய பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், புதுவை மாநில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்திலேயே வகுப்புகளை நடத்தி வருகின்றன.
அதன்படி, அவா்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி பிராந்தியத்தில் பொதுத்தோ்வை 146 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,278 பேரும், 573 தனித் தோ்வா்களும், காரைக்காலில் 28 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 497 பேரும், 284 தனித் தோ்வா்களும் என மொத்தம் 174 பள்ளிகளைச் சோ்ந்த 8,632 போ் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா்.
அவா்களுக்காக புதுச்சேரியில் 20 தோ்வு மையங்களும், காரைக்காலில் 6 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 7,246 மாணவா்கள், தனித் தோ்வா்கள் 346 போ், விலக்களிக்கப்பட்டவா்கள் 5 பே என மொத்தம் 7,597 போ் எழுதியதாக கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.