செய்திகள் :

பத்திரிகைத்துறையில் சாதிக்க ஆசையா? - தமிழக அரசு வழங்கும் பயிற்சி திட்டம்; விண்ணப்பிக்கும் வழிமுறை

post image

சென்னையில் இருக்கக்கூடிய ஆசிய ஊடகக்கல்லூரியும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஒரு பயனுள்ளத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அதாவது இதழியல் மற்றும் தொடர்பியல் துறை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஒரு வார உண்டு உறைவிடப் பயிற்சியை வழங்கவிருக்கின்றனர்.

பத்திரிகைத்துறை
பத்திரிகைத்துறை

பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களில் 15 நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு முன்னணி ஊடக நிறுவனங்களில் மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் கூடிய நேரடி பயிற்சி 2 மாதங்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றனர். ஒரு வார பயிற்சியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை பயிற்சி நடத்தும் நிறுவனமே கட்டணமின்றி ஏற்பாடு செய்யும். பயிற்சிக்கும் கட்டணம் ஏதும் இல்லை.

பயிற்சி நாட்கள்

முதல் பயிற்சி: 18.08.2025 முதல் 26.08.2025 வரை

இரண்டாம் பயிற்சி: 15.09.2025 முதல் 23.09.2025 வரை

இடம்: ஆசிய ஊடகவியல் கல்லூரி, தரமணி, சென்னை

பத்திரிகைத்துறை
பத்திரிகைத்துறை

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டினை வாழிடமாகக் கொண்டு தனது பட்டப்படிப்பை (UG or PG) முடித்த ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) அல்லது மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் (SCC) பிரிவினைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் அல்லது தனியார் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் (Regular Mode) பயின்று இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் (UG or PG) பெற்றிருக்க வேண்டும்.

இதழியல்/பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த பட்டப்படிப்புகள் (UG or PG) அல்லது மக்கள் தொடர்பியல், மொழித்துறை, இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் பயின்று பட்டம் (UG or PG) பெற்றிருக்கலாம்

பத்திரிகைத்துறை
பத்திரிகைத்துறை

வயது வரம்பு

20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

ஜீலை 2, 2025 முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கி விட்டது. ஜீலை 31, 2025 விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும்.

கீழே உள்ள QR code Scan செய்து Google Form Link-யை பயன்படுத்தி பயிற்சிக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பத்திரிகைத்துறை
பத்திரிகைத்துறை

UGC NET: "ஆங்கிலத் தேர்வில் 'சமஸ்கிருதம்'; இலவச மதிப்பெண்கள் வழங்க வேண்டும்" - சு.வெங்கடேசன் காட்டம்

இன்று நடைபெற்ற ஆங்கில இலக்கியத்துக்கான தேசிய தகுதித் தேர்வில் சமஸ்கிருதம் பற்றி அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.இதுகுறித்த அவர... மேலும் பார்க்க

திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக் கொண்ட பின்னணி என்ன?

திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சிப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து, சமூக வலைத்தளங்களில... மேலும் பார்க்க

Aviation: ஃப்ளைட்ல வேலை பார்க்கணும்னா பைலட்தான் ஆகணுமா? - விமானத் துறை படிப்புகளின் லிஸ்ட்

இந்தியாவில் விமானங்கள் எப்போதுமே ஈர்ப்புக்குரியவைதான். வானத்தில் விமானத்தை வேடிக்கை பார்ப்பதே ஒரு அலாதி அனுபவம்தான். ஒரு சிலருக்கோ வேடிக்கை பார்ப்பதைத் தாண்டி விமானங்களிலேயே வேலை கிடைத்தால் எப்படி இரு... மேலும் பார்க்க