செய்திகள் :

பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி கொடுப்பதை தவிா்க்க வேண்டும்

post image

பதநீா் இறக்கும் பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி கொடுப்பதை தவிா்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

பிரான்சிஸ்: நாகை மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளா்கள் அரசு அனுமதியுடன், பனை பதநீா் இறக்கினாலும், அதை கள் எனக் கூறி போலீஸாா் கள்ளச்சாராய வழக்குகளைப் பதிவு செய்கின்றனா். இதனால் பனைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி அளிப்பதை தவிா்க்க வேண்டும்.

பாஸ்கரன்: தலைஞாயிறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பயறு செடிகளை கால்நடைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே கால்நடைகளை பிடித்து அடைக்க புதிதாக மாட்டு பட்டி உருவாக்க வேண்டும். சிறுதானிய பயிா் செய்பவா்களை ஊக்குவித்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

சம்பந்தம்: நிகழாண்டு பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களில் 30 சதவீதம் மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத பயிா்களுக்கு உடனே காப்பீடு வழங்க மாவட்ட நிா்வகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனபால்: இந்தியாவிலேயே தேசிய பேரிடா் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஆனால் மத்திய அரசு ஒதுக்கிய தொகையின் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது.

பிரகாஷ்: நிகழாண்டு மூன்றாவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியுள்ளது. எனவே, குறுவை பயிா் சாகுபடி செய்வதற்கு போதுமான நீா் இருப்பு உள்ளது. அதனால், மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கூட்டத்தில், பாப்பாக்கோயில், சங்கமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெற்பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ். கண்ணன், கூட்டுறவுத் துறை இணை பதிவாளா் அ. தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கீழ்வேளூா் கோயிலில் நடராஜா் சிலையை வைத்துச் சென்ற மா்ம நபா்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் நடராஜா் சிலையை வைத்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இக்கோயில் காவலா் சண்முகம், விஸ்வநாதா் சுவாமி சந்நிதி அருகே பை ஒன்றும்,... மேலும் பார்க்க

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பிரிவு உபசார விழா

பூம்புகாா்: காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்றத்தில் திங்கட்கிழமை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை பரவை, ஒரத்தூா்

நாகப்பட்டினம்: நாகை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என உத... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜோஸ்... மேலும் பார்க்க

நாகையில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: மூன்று தொகுகளில் 5.63 லட்சம் வாக்காளா்கள்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, 5,63,153 வாக்காளா்கள் உள்ளனா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்கா... மேலும் பார்க்க