பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குக்கு பாகிஸ்தான் ராணுவ மரியாதை: விக்ரம் மிஸ்ரி
புது தில்லி: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியிருப்பதாவது, பயங்கரவாதிகளைக் குறிவைத்துத்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச் சடங்கு நடந்துள்ளது. ஆனால், இந்தியாவால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதற்கான புகைப்படங்களையும் அவர் காட்டினார்.
மேலும் பேசிய விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் அணைகள் போன்ற கட்டமைப்பின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படுகிறது. பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்தான், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. டிஎன்ஏ மூலம் உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.