அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.
குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணுவ வீரரான மன்சூர் அஹ்மத் வாகே (வயது 45), அவரது மனைவி ஆலியா (38) மற்றும் அவர்களது மகள் என 3 பேரின் மீதும் பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் மன்சூரின் வயிற்றிலும் அவரது மனைவி மற்றும் மகளின் கால்களிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க: பிரதமரை டிரம்ப் ஏன் அழைக்கவில்லை?- மக்களவையில் ராகுல் சர்ச்சைப் பேச்சு
இதனைத் தொடர்ந்து, மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மன்சூர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்தினர் இருவரது நிலை தற்போது சீராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் அம்மாநில காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.