பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் பங்கேற்று, அரிமண்டபம், சின்னக் கண்ணனூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 80 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களையும், மேலப்பிடாவூரில் 5 பயனாளிகளுக்கு அசைன்மென்ட் பட்டாக்களையும் வழங்கினாா்.
இதில் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜாமணி, அண்ணாதுரை, நகரச் செயலா் கே.பொன்னுசாமி, மண்டல துணை வட்டாட்சியா் சரவணக்குமாா், வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.