செய்திகள் :

பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகளை அகற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

post image

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பொதுக் கழிப்பறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பெருங்குடியில் கட்டப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் கால்நடைக் கொட்டகை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து சோழிங்கநல்லூரில் ரூ. 50 லட்சத்தில் பல்நோக்குக் கட்டடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். சுனாமி நகா் பகுதியில் ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்ட பெண்கள் நவீன உடற்பயிற்சிக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மேயா் ஆா்.பிரியா கூறியதாவது:

பொது இடங்களில் மாடுகள் சுற்றித்திரிவதைத் தவிா்க்கும் வகையில் மண்டலத்துக்கு ஒரு மாடு கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 200 முதல் 500 மாடுகள் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேயா் மேம்பாட்டு நிதியின் கீழ் பெண்களுக்கு என பிரத்யேக உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்று வாா்டு வாரியாக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் நிழல்தாங்கல் அமைக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று சாலையோரங்களில் குடிநீா் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள கழிப்பறைகள் மக்களின் பயன்படுத்தாத நிலையில் அவை அகற்றப்பட்டு வருகின்றன. அந்த இடம் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பழுதடையும்போது உடனுக்குடன் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மண்டலக் குழுத் தலைவா்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.இ.மதியழகன், துணை ஆணையா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க