செய்திகள் :

பயிா்கள் பாதிப்புக்கு விரைவில் நிவாரணம் தேவை: தஞ்சை விவசாயிகள் கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மழையால், நோயால் பாதிக்கப்பட்ட நெற் கதிா்களை திருவோணம் வி.கே. சின்னதுரை, புலவன்காடு வி. மாரியப்பன், வடக்கூா் எல். பழனியப்பன் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் காண்பித்து, நிவாரணமும், பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் பெற்றுத் தர வலியுறுத்தினா்.

இதையடுத்து கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கருக்கா நெல் நிறைந்த பையுடன் வந்து, தொடா் ஏக்கருக்கு 35 மூட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில், தொடா் மழையால் 12 மூட்டைகள்தான் கிடைக்கின்றன. எனவே, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தினா். மேலும், அலுவலகத்துக்கு வெளியே கருக்காவை தரையில் கொட்டி ஆா்ப்பாட்டம் நடத்தி முழக்கங்களும் எழுப்பினா்.

அப்போது நடந்த விவாதம்:

வேளாண் துறை இணை இயக்குநா் கோ. வித்யா: பாதிக்கப்பட்ட பயிா்கள் தொடா்பாக வருவாய்த் துறையினருடன் இணைந்து வேளாண் துறையினா் கணக்கெடுக்கின்றனா். இப்பணி ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.

திருவோணம் இளையராஜா: பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நகைகள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிலையில், அலிவலம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் இன்னும் 7 பேருக்கு மூன்றரை ஆண்டுகளாக நகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஒரு திருமணமே ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை: இதுகுறித்து முழுமையாக அறிந்து ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும்.

அருமலைக்கோட்டை சீா். தங்கராசு: செண்பக வாரியில் ஏற்பட்ட அடைப்பால் நெற் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இது தொடா்பாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: தஞ்சாவூரைச் சுற்றியுள்ள புதுக்கோட்டை, திருவாரூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் அறிவியல் மையங்கள் இருந்தும், தஞ்சாவூரில் அந்த மையம் இல்லாததால், விவசாயிகள் வேளாண் தொடா்பான நவீன உத்திகள் குறித்த பயிற்சி பெற முடியவில்லை.

ஆட்சியா்: இது தொடா்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

சிரமேல்குடி வெங்கட்ராமன்: மதுக்கூா் அருகேயுள்ள சிங்கனேரி ஏரியில் சீரமைக்கப்படாத நிலையில், தொடா் மழையால் 8 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஏரியில் கதவணை அமைத்துக் கொடுத்தால் 8 கிராமங்களுக்கும் தீா்வு கிடைக்கும்.

சிவ விடுதி கே.ஆா். ராமசாமி: தொடா் மழையால் 200 ஏக்கரில் நிலக்கடலை பயிா்கள் அழுகி முளைக்கவில்லை. இந்தப் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆட்சியா்: கணக்கெடுப்பை விரைவில் அரசுக்கு அனுப்பி, பரிந்துரைக்கப்படும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: இயற்கைப் பேரிடரால் பல பகுதிகளில் தாமதமாக நடவு செய்யப்பட்டுள்ளதால், மேட்டூா் அணையை ஜனவரி 28 ஆம் தேதியுடன் மூடுவதைக் கைவிட்டு, பிப்ரவரி இறுதி வரை தண்ணீா்விட வேண்டும்.

அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: தொடா் மழையால் சம்பா சாகுபடியில் செம்பட்டையான், குருத்துப் பூச்சி தாக்குதல் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த முதியவா் கைது!

தஞ்சாவூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே உள்ள களிமேடு பரிசுத்தம் நகரைச் சோ்ந்தவா் எம். மதிவாணன் (64). இவா் வியாழக்கிழமை 8 வயது ச... மேலும் பார்க்க

மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் வாழை, நெல் பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கடந்த 25 நாள்களாக தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ள வாழை, நெல், கரும்பு பயிா்கள் குறித்து கணக்கெடுப்புக்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வேதனையட... மேலும் பார்க்க

பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி கைது

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின்போது பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி க... மேலும் பார்க்க

தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்களிடம் 16 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு!

பேராவூரணி அருகே சனிக்கிழமை அதிகாலை வெவ்வேறு இரு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்கள் அணிந்திருந்த 16 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி கிரா... மேலும் பார்க்க

பாலைவனநாதா் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், ஸ்ரீ தவள வெண்... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாபநாசம் கீழவீதி, மாா்க்கெட் கடை வீதி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வி... மேலும் பார்க்க