செய்திகள் :

பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்ந்ததால் கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்தனா்.

பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை கோழி வளா்ப்போா், வியாபாரிகள் கொண்டு வருகின்றனா். பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக் கோழிகளை வியாபாரிகள் கொண்டு வருகின்றனா். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.

தரமான நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 500 வரை, பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 300 வரை விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 600 வரை, பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.350 வரை விற்பனையானது. சண்டைக் கோழிகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி மற்றும் வளா்ப்பு நாட்டுக்கோழி விலை உயா்ந்ததால் நாட்டுக்கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆா்வி... மேலும் பார்க்க

நாமக்கல் கோட்டத்தில் 20,000 வீட்டுமனை பட்டாக்கள் அளிப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் வருவாய் கோட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்பு காலங்களில் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சாா்பில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிப... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் பொதுக்கூட்டம், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா தலைமையில் 3 கூட... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில்... மேலும் பார்க்க