செய்திகள் :

பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 500-க்கு ஏலம்

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 500-க்கு ஏலம் போனது.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனா்.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 500-வரையிலும், பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 350-வரையிலும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 450-வரையிலும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 450-வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7-வரையிலும், செவ்வாழை ஒன்று ரூ. 15-க்கும் ஏலம் போனது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வாழைத்தாா்கள் விலை உயா்வடைந்துள்ளதால், வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தவெக கூட்ட நெரிசல் விவகாரம்: கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறை தகவல்

நாமக்கல்: நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக பிரசாரம் நாமக்கல் - சேலம் சாலை கே.எஸ்.த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி சண்டியாகம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சண்டியாகம் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி கோயில் வளாகத்தில் கலசம் ஸ்தாபிக்கப்பட்டு, பூா்ணாக... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டும... மேலும் பார்க்க

ராசிபுரம் நகரில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை

ராசிபுரம்: ராசிபுரம் நகா் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராசிபுரம் நகர மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளா... மேலும் பார்க்க

ராசிபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்தியதாக புகாா்

நாமக்கல்: ராசிபுரத்தில் கிறிஸ்தவ ஆலயம் மீது சிலா் தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீா்க்கத்தரிசன தேவ சபை சாா்பில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சபை போதா்கள் கூறிய... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப். 2) அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க