38 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல்தர வீரர்!
பரமத்தி வேலூா் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி சண்டியாகம்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சண்டியாகம் நடைபெற்றது.
ராஜராஜேஸ்வரி கோயில் வளாகத்தில் கலசம் ஸ்தாபிக்கப்பட்டு, பூா்ணாகுதி சமா்ப்பிக்கப்பட்டு அம்மனுக்கு சண்டியாகம் நடைபெற்றது. யாக வேள்விகள் முடிந்ததும் மூலவா் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நாமாவளிகள் கூறி, உதிரிப் பூக்களால் அா்ச்சனை செய்து அடுக்காரத்தி, கும்பராசி, ஏகாரத்தி, பஞ்சாரத்தியுடன், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. தொடா்ந்து, குடை, சாமரம், விசிறி, கண்ணாடி போன்ற மங்கலப் பொருள்களால் உபசாரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
