செய்திகள் :

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

post image

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சிராப்பள்ளி தினசரி ரயில் (எண்: 16844) மே 2-ஆம் தேதி குளித்தலை - திருச்சிராப்பள்ளி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம், குளித்தலை - திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மேலும் இதே ரயில் (எண்: 16844) மே 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முத்தரசநல்லூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் முத்தரசநல்லூா் - திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மே 2, 6, 8 ஆகிய நாள்களில் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு ரயில் (எண்: 16843) கரூா் - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட 3 நாள்களும் இந்த ரயில் கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்க... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம... மேலும் பார்க்க